நாடோடும் கூட்டம் நாங்கள்
நலம் நாடும் தூண்களாக
அயல்நாட்டு உழைப்பாளியாக
உடுத்தும் உடைகள் கந்தலாக
கஞ்சிக்கு மட்டும் பணம்வைத்துகொண்டு
வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மைசேர்க்க
சொந்தபந்தங்களை தூரத்தில் வைத்து...
நமக்கும் நல்லகாலம் பொறக்காத
நமது நாட்டுக்கு விடிவுகாலம் வரதா - என
ஏங்கும் இளைஞர் கூட்டம் நாங்கள் !
ஓட்டுவாங்கி எங்களை ஏய்க்கும்
மாக்களே ...
நீ உண்ணுவது உணவு அல்ல........
எங்கள் உழைப்பில் சிந்தும் உமிழ்நீர் ....
மக்கள் நலனை நாடி
நாளைய இந்தியாவை வளமாக்க
இனியாவது முடிவு எடுப்போம்...
நல்ல தலைவர்கள் நாட்டில் எவரும் இல்லை ...?
வர போவதும் இல்லை ...?
நமது நலனை வேண்டும் நண்பர்களே ...
நாட்டுக்கு நல்லது செய்ய தலைவர்களை
உருவாக்குவோம்...
தவறுகள் செய்யும் சகோதரை
நல்வழி நடத்த முன்வர வேண்டும்...
நாம் தேசதுரோகி அல்ல...
நமது தாய் நாட்டை காக்கமறக்க ...
ஓட்டு போடுங்கள்...
சிந்தித்து போடுங்கள்...........
நல்லது செய்ய தூண்டுங்கள்.........
வளமான நாடு இந்தியா
ஏங்கும் எதிலும் இந்தியா..............
வெற்றி பெற நாமும் முயற்சி செய்வோமாக..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக