Powered By Blogger

வியாழன், 24 மே, 2012

நீ பெண்தானே ....?

நீ  பெண்தானே
எப்படி உண்மையை சொல்வாய் ...?
கரு வண்டு விழிகளை
காட்டிவிட்டு
காதல் இல்லை என்று ...

விடை தேடும் விட்டில் பூச்சாக நான்

நிஜங்கள் கொல்லைபோனதே
நினைவுகளால் தொல்லையானதே 
உறவுகள் சொல்லி கொடுப்பதில்லை 
உணர்வுகள் சொல்ல மறுப்பதில்லை 
விடை தேடும் விட்டில் பூச்சாக நான்...  !

கனவுகளோடு மட்டும்

தெரிந்துவிட்டால் போதுமடி
தொடர்ந்து வரும்
என் அழைப்பிதழ்
உன் முகவரியை
என் முகவரியுடன்
இணைத்துக்கொள்ள ..........
கனவுகளோடு மட்டும்
இருந்தால் போதுமா ?

உன்னவனாக

நான் என்ன தவம்
செய்தேனோ
உன்னை அடைய .......
தவமாய் தவம் இருக்கின்றேன்.......
உன்னவனாக
ஒரு சொல் போதுமடி........
என் உயிர் உள்ள வரை நேசிக்க .......

என் நிலை

என் நிலை
என் கட்டுப்பாட்டில் இல்லை
உன் நிழல்
என்னை தொடருவதாள்

இருந்தும் பயனில்லை

நான் மொழிபயர்க்க
கற்றுகொல்கின்றேன்
இருந்தும் பயனில்லை
உன் மவுனத்துக்கு
விடை தெரியாததினால்..

பொய்யான உலகுக்கு மெய்யானது

அழகான பெண்தானடி நீ
அரும்பு மொழிகள் பேசுவது
உன் கண்கள் தானடி
பொய்யான உலகுக்கு மெய்யானது
நீ என்னுடன் சிரித்து பேசும்போது ...
காதலும்  இல்லையடி
காமத் தொல்லையும் வல்லயடி...
மாறாக உன் நினைவினால்
கவிதை .............