Powered By Blogger

வியாழன், 10 ஜூன், 2010

மௌனம் கலைந்தவளே

மௌனம் கலைந்தவளே
காலம் பல கடந்தபின்னாலும்
நிறைவான என் நினைவுகளை சுமப்பவளே !
முகத்தை மட்டும் திரையிட்டால் நியாயமா ?
முறைத்து பார்கவில்லை - உன்
முந்தானையில் முகம் துடைக்கவில்லை
சிலுமிச வார்த்தைகள் சொல்லி
உன் சிந்தனையை சிதைக்கவில்லை
எண்ணத்தில் உருவானது
உன்னை உரிமையாக்க - நீயோ
உள்ளுக்குள் என்னை
நினைத்து உருகியதும்
உறக்கத்தில் என்பெயர் சொல்லி
புலம்பியதும் - மறைத்தது போதுமடி ?
நாடோடிவா
என்னை தேடி ஓடோடிவா
நான் இருக்கின்றேன்
உன்னை பூ போல பார்த்துக்கொள்ள !
அன்று உன்னை நாடியவன்
இன்றும் உனக்காகவே காத்திருக்கின்றான்
அதே காதலோடு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக